லெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
லெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
06.10.1998 அன்று முல்லை மாவட்டம் மாங்குளம் மற்றும் கனகராயனாறு பகுதிகள் நோக்கி “ஜெயசிக்குறு” நடவடிக்கைப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட முன்நகர்வு முயற்சிக்கெதிரான முறியடிப்புச் சமரிலும்; வெவ்வேறு சம்மவங்களிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய 17 மாவீரர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.
முல்லை மாவட்டம் மாங்குளம் நோக்கி 06.10.1998 அன்று முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில்……..
லெப். கேணல் தீபராஜ் (டயஸ்) (சுப்பிரமணியம் வரதச்சந்திரன் – அம்பாறை)
கப்டன் இலக்கியன் (லீனஸ்பொன்னுக்கோன் ஜெறோம் எட்வின் – யாழ்ப்பாணம்)
கப்டன் மதர்சகுமார் (கோகுலன்) (நாகலிங்கம் சிவநேசன் – மட்டக்களப்பு)
கப்டன் கெங்காதரன் (சிவசுப்பிரமணியம் பகீரதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தமிழ்மணி (யோதி) (கோபாலப்பிள்ளை நமசிவாயம் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் புதியவன் (தில்லையம்பலம் குமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நிவசங்கர் (தேவசகாயம் பகீரதன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பிரியன் (தம்பிப்பிள்ளை பேரின்பநாயகம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை தர்மன் (ஞானப்பிரகாசம் தேவன் – அம்பாறை)
வீரவேங்கை முத்தனன் (முக்கண்ணன்) (அருள்நேசலிங்கம் அமலன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை சத்தியாகரன் (வெள்ளைத்தம்பி விஜயந்தராசா – மட்டக்களப்பு)
வீரவேங்கை லோகிதா (விநாயகமூர்த்தி குணவதி – மட்டக்களப்பு)
கனராயன்ஆற்றுப் பகுதியூடாக முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில்….
மேஜர் கலாநிதி (இராசேந்திரம் நந்தினி – யாழ்ப்பாணம்)
கப்டன் சாம்பவி (இராசலிங்கம் ஈஸ்வரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இசைமகள் (தயினேஸ் அன்ரனிநிரோசா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சாளி (வேல்சாமி ஜெயந்தி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அறமலர் (சண்முகலிங்கம் மதிவதனி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கனிமகள் (தம்பிராசா சுதாயினி – முல்லைத்தீவு)
மட்டக்களப்பு அலையடிவேம்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் ….
லெப்டினன்ட் சுதந்திரதீபன் (முருகேசு லோகநாதன் – அம்பாறை)
மட்டக்களப்பு களுதாவளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்குதலில்….
லெப்டினன்ட் பவசிவன் (சோமசுந்தரம் குணசுந்தரம் – மட்டக்களப்பு)
கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்…
லெப்டினன்ட் தேனிசை (சந்தியா) (யோசப் இராஜேஸ்வரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பட்டு (குமாரசாமி மஞ்சுளா – கிளிநொச்சி)
வீரவேங்கை வேல்விழி (தர்மகுலராசா பிறேமலதா – யாழ்ப்பாணம்)
திருகோணமலை மல்லிகைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்குதலில்….
மேஜர் எழிலமுதன் (இம்ரான்) (சிவப்பிரகாசம் மோகனராசா – திருகோணமலை)
லெப்டினன்ட் சபேசன் (கணபதிப்பிள்ளை கரிதரன் – திருகோணமலை)
யாழ்ப்பாணம் கட்டுவன் பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில்…..
லெப்டினன்ட் கனைத்தேவன் (ஜயாத்துரை சுஜீபன் – யாழ்ப்பாணம்)
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”