Please enter your username and email address. Get new password
Register Now
x

எம்மைப்பற்றி

அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் !

எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது.

தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் தாயகக் கனவை வேர் விட்டு நீளமாகவும், ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம்.

எம் தேசத்தின் காவல் தெய்வங்களின் இதுவரை வெளிவராத பல காவிய நினைவு குறிப்புகள், அவர்கள் தியாகத்தில் ஈகத்தில் மலர்ந்த களத்தின் நினைவுகள், தமிழீழ போராட்ட வரலாற்று ஆவணத்தொகுப்புகள், மற்றும் அழிந்த அழிக்கப்பட்ட மாவீரர்கள், போராளிகள், கலைஞர்கள் அற்பணிப்பில் இசையூற்றாக மலர்ந்த 3000க்கு மேற்பட்ட எழுட்சிப்பாடல்கள் (250 மேலான இசைத் தட்டுகள்) பல குறும்படங்கள், திரைப்படங்கள் என ஈழத்தின் போரியல் விழுமியங்களை மீட்டல் செய்து தாய்மண்ணின் விடியலின் கனவு சுமந்து; வீர அத்தியாயத்தின் நாமங்கள் சுமந்து நாளும் நெருப்பூட்டி வடித்தெடுத்த வரிகளை, இசையூற்றிலே இருக்கை செதுக்கி தமிழீழ விடியலுக்கு ஆணிவேராக இருந்த வரலாற்றுச் சுவடுகளை எம் ஊர்ப்புறத்தே உரசிவரும் காற்றைப் போலவே காற்றினை எங்கள் எண்ணத்துக்கு மாற்றி அதில் பல வண்ணங்கள் காட்டி நாளும் தமிழீழ நினைவில் உலகின் அனைத்துப் பாகங்களிலும் சொல்லிலடங்கா உணர்வுகளுடன் தேசக்காற்றை வீசச்செய்துள்ளோம்.

உலகின் பல்வேறு தேசத்திலும் பரந்து வாழும் தமிழீழ உறவுகளே!

“உங்களிடம் இருக்கும், தமிழீழ திரைப்படங்கள், ஒளிவீச்சு சஞ்சிகைகள், தமிழீழ கானங்கள் மற்றும் மாவீரர் குறிப்புகள், புத்தக ஆவணச் சுவடுகள் உங்களிடம் இருக்குமாயின் மின்னஞ்சலில் thesakkaatu@gmail.com தொடர்பு கொள்ளங்கள்!

உங்கள் தேசத்தில் உள்ளூருக்குள் ஆவணங்களை அனுப்பி வைக்கும் வசதிகளும் தற்சமயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கனடா – லண்டன் (பிரித்தானியா) – நோர்வே – ஜேர்மன் – பிரான்ஸ் (ஐரோப்பா நாடுகள்) – தமிழகம் (இந்தியா) ஆகிய தேசத்தில் தேசக்காற்றுக்கு உரிய (தமிழீழ) ஆவணங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அல்லது தபால் மூலம் உள்ளூருக்குள் அனுப்பிவைக்கலாம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

என்றும் அன்புடன்
தேசக்காற்று நிர்வாகம்.

தினம் ஒரு நிழற்படம்

பிரிவுகள்

நேயர்கள்

: :: :: :: : தேசக்காற்று நேயர்களே! : :: :: :: :

தேசக்காற்று இணையத்தள மெருகூட்டல் வேலைப்பாடுகள் துரிதமாக நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும் புதுப்பொலிவுடன் மிக விரைவில் உங்கள் வாசல் நோக்கி வீசும்....

: :: :: :: : தேசக்காற்று நேயர்களே! : :: :: :: :

தேசக்காற்று இணையத்தள மெருகூட்டல் வேலைப்பாடுகள் துரிதமாக நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும் புதுப்பொலிவுடன் மிக விரைவில் உங்கள் வாசல் நோக்கி வீசும்....