அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம்!
எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது.
தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழ்ந்த தேசம் தமிழீழம். நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் தாயகக் கனவை வேர் விட்டு நீளமாகவும், ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை வரலாற்று ஏட்டில் பதிந்து இதுவரை உலகின் அனைத்துப் பாகங்களிலும் சொல்லிலடங்கா உணர்வுகளுடன் வீசச் செய்துள்ளோம்.
அன்பான உறவுகளே!
இதுவரையிலும் எத்தனையோ இடங்களுக்கு மத்தியிலும் ஆவணக்கீற்றின் வீச்சுக்கு அயராது பங்களிப்பை வழங்கி அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததுபோன்றும் தொடர்ந்தும் உங்களால முடிந்த ஒத்துழைப்பை வழங்கியும்; மாவீரர் குறிப்புகள் – புத்தக ஆவணச் சுவடுகள் மற்றும் ஒளிவீச்சு சஞ்சிகைகள் மற்றும் தமிழீழ கானங்கள் உங்களிடம் இருக்குமாயின் எம்முடன் தொடர்புகொண்டு நாளைய சந்ததியின் வரலாற்று தேவைக்காக பகிர்ந்தளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் கருத்துக்கள், தமிழீழ ஆவண ஆக்கங்களை எமக்கு அனுப்பிவையுங்கள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
அன்புடன்.
தேசக்காற்று நிர்வாகம்.
