மட்டக்களப்பு – சோனகன் வெட்டைப் படுகொலை

மட்டக்களப்பு – சோனகன் வெட்டைப் படுகொலை – 26.08.1990
26.08.1990 அன்று காலை இப் பகுதி மக்கள் வயல்களில் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். வேறு சிலர் கடைகளிலும் அலுவலகங்களிலும் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.
26.08.1990 அன்று காலை விமானப்படையின் விமானங்கள் தாழ்வாகப் பறந்து வருவதைக் கண்ட பொதுமக்கள் அச்சம் காரணமாகப் பாதுகாப்புத் தேடி கட்டடங்களினுள்ளும் பற்றைகளினுள்ளும் மரங்களின் கீழும் அடைக்கலம் புகுந்தார்கள். அடைக்கலம் புகுந்த மக்கள்மீது விமானப்படையினரின் விமானங்கள் குண்டுகளை வீசின. விமானப்படையின் தாக்குதலில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட பலர் உயிரிழந்தார்கள்.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.
