கடற்கரும்புலிகள் லெப். கேணல் நளா, மேஜர் வஞ்சியின்பன் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி லெப். கேணல் நளா, கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.
07.01.2006 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் அதிவேக “டோறா” கலம் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் நளா / அகரெழில், கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன் ஆகிய கடற்கரும்புலி மறவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.


தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெகிஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
