கரும்புலி லெப். கேணல் பூட்டோ வீரவணக்க நாள்
கரும்புலி லெப். கேணல் பூட்டோ உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
11.08.2006 அன்று யாழ். குடாநாட்டில் சிறிலங்கா படைத்தளப் பகுதி ஒன்றினுள் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வேவு நடவடிக்கை ஒன்றின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் பூட்டோ / கலையரசன் / சங்கர் ஆகிய கரும்புலி மாவீரரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் கரும்புலி லெப். கேணல் பூட்டோ அவர்கள்.
மணவாளன்பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் பங்குபற்றிய ஐந்து கரும்புலி வீரர்களில் நால்வர் (கடற்கரும்புலி லெப். கேணல் நரேஸ், கரும்புலி மேஜர் நிலவன், கரும்புலி மேஜர் குமுதன், கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்) வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவடைய எஞ்சியிருந்த ஒரேயொரு வீரன் கரும்புலி லெப். கேணல் பூட்டோ மட்டுமே.
அன்றைய தாக்குதலின் நினைவாக ‘புயல் புகுந்த பூக்கள்’ என்ற முழுநீளத் திரைப்படம் 2005ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த கரும்புலி தாக்குதலில் உண்மையில் தான் எப்படி பங்கு பற்றி வெற்றியுடன் திரும்பி வந்தாரோ அதே பாத்திரத்தில் தன்னை ‘பூட்டோ’ என்ற கதாபாத்திரத்தில் உயிர்ப்பின் காவியமாக பதியவைத்துச் சென்றார்.
கரும்புலி பூட்டோ அவர்கள் ‘கலையரசன்’ என்ற பேரில் கவிதைகள் எழுதினார். சில பாடல்களும் எழுதியிருக்கிறார். சக கரும்புலி வீரன் மேஜர் நிலவனுக்காக இவர் எழுதிய பாடலான ‘உணர்வின் வரிகள் வரையும் கோடு’ என்ற பாடல் அவற்றுள் முக்கியமானது. புயலவன் எனும் புனைபெயரில் பல காவியங்களையும் வரைந்தார்.
||விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல் எனும் வீரம்…

11.08.1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரை, கட்டுமுறிவு சிறப்பு அதிரடிப்படை முகாம் தகர்த்து அழிக்கப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் கெங்காதரன், லெப்டினன்ட் ரகுநாதன் / சிறிக்காந், லெப்டினன்ட் கமலவன் / றொபேட்சன், லெப்டினன்ட் அருந்தாவரன் / அழகன், லெப்டினன்ட் நம்பி / பாலு, 2ம் லெப்டினன்ட் உழவன் / ஜெனித், 2ம் லெப்டினன்ட் நக்கீரன் / ரூபன், 2ம் லெப்டினன்ட் வெண்ணிலன் / வெள்ளையன், 2ம் லெப்டினன்ட் வசந்தன், வீரவேங்கை நந்தகுமார், வீரவேங்கை பவிராஜ் / கண்ணன், வீரவேங்கை குட்டிமணி, வீரவேங்கை பரமரதன் / பரமன், வீரவேங்கை சந்திரமாறன், வீரவேங்கை வதனகுமார், வீரவேங்கை ரமணி, வீரவேங்கை ஆத்மன் ஆகிய வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேஜர் கெங்காதரன் (நடராஜா ராஜேந்திரன் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ரகுநாதன் / சிறிக்காந் (மாணிக்கம் விஜேந்திரன் – ஐயங்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கமலவன் / றொபேட்சன் (கதிர்காமத்தம்பி ராஜலிங்கம் – தன்னாமுனை, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அருந்தாவரன் / அழகன் (கைலாயபிள்ளை உதயகுமார் – பழுகாமம், மட்டக்களப்பு)
லெப்டினன்ட் நம்பி / பாலு (முத்துலிங்கம் தவபாலன் – முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் உழவன் / ஜெனித் (இராமசாமி செல்வராசா – கரடியனாறு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நக்கீரன் / ரூபன் (கந்தையா விமலேஸ்வரன் – துறைநீலாவனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் வெண்ணிலன் / வெள்ளையன் (கதிர்காமப்போடி துரைராசா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் வசந்தன் (வைரமுத்து தம்பிராசா – ஆரையம்பதி, மட்டக்களப்பு)
வீரவேங்கை நந்தகுமார் (வைரமுத்து வசந்தகுமார் – நாவிதன்வெளி, கல்முனை, அம்பாறை)
வீரவேங்கை பவிராஜ் / கண்ணன் (கணபதிப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி – பெரியபோராதீவு, மட்டக்களப்பு)
வீரவேங்கை குட்டிமணி (கணேசபிள்ளை சுதாகரன் – ஆரையம்பதி மட்டக்களப்பு)
வீரவேங்கை பரமரதன் / பரமன் (வடிவேல் புவனேந்திரன் – திருக்கோயில், அம்பாறை)
வீரவேங்கை சந்திரமாறன் (அழகிப்போடி விக்கினேஸ்வரன் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை வதனகுமார் (மாமாங்கம் சாம்பசிவம் – களுவாஞ்சிக்குடி, பெரியபோராதீவு, மட்டக்களப்பு)
வீரவேங்கை ரமணி (கதிர்காமன் சபாரெத்தினம் – காயங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை ஆத்மன் (கணபதிப்பிள்ளை ஜெயராசா – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
11.08.1994 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் பீலிஸ் / அதிதரன், மேஜர் நவம் / அல்பேட், மேஜர் இளந்தேவன் / அலன், கப்டன் சுகுமாறன் / சுகு, கப்டன் முருகன் / கமல், கப்டன் இலக்குவன் / ஜோதிராஜ், லெப்டினன்ட் ஈழம், 2ம் லெப்டினன்ட் பிரசாந்தன் / வாணன் ஆகிய வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேஜர் பிலீஸ் / அதிதரன் வீரசிங்கம் செல்வராசா – துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு)
மேஜர் நவம் / அல்பேட் (செல்லதம்பி கிருபராசா – கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு)
மேஜர் இளந்தேவன் / அலன் (செல்லையா ஜெயசீலன் – உக்கிளாங்குளம், வவுனியா)
கப்டன் சுகுமாறன் / சுகு (சுப்பிரமணியம் சந்திரவிலாஸ் – மடுக்கோயில், மன்னார்)
கப்டன் முருகன் / கமல் (இராமச்சந்திரன் சிறிராஜ் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
கப்டன் இலக்குவன் / ஜோதிராஜ் (சண்முகம் மருதைக்குமார் – இரணைஇலுப்பைக்குளம், வவுனியா)
லெப்டினன்ட் ஈழம் (சோமசுந்தரம் சிவகுமார் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பிரசாந்தன் / வாணன் (தில்லையம்பலம் சிறிகாந்த் – திமிலதீவு, புதூர், மட்டக்களப்பு)
11.08.1994 அன்று மன்னார் தீவில் அமைந்திருந்த பீ.எம்.சி சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் ஜஸ்மின் / நாவண்ணன், கப்டன் குமரன், கப்டன் சிறீக்காந், லெப்டினன்ட் அறிவனார், லெப்டினன்ட் ராஜா
ஆகிய வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேஜர் ஜஸ்மின் / நாவண்ணன் (மரியதாஸ் அன்ரன்பியூட்டில்யூட் – சாவற்காடு, மன்னார்)
கப்டன் குமரன் (பரமேஸ்வரன் பிரதீபன் – நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்)
கப்டன் சிறீக்காந் (பொன்னுச்சாமி குகதீஸ்வரன் – பெரியகல்லாறு, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அறிவனார் (கணேஸ் பாலச்சந்திரன் – 4ம் வாய்க்கால், கிளிநொச்சி)
லெப்டினன்ட் ராஜா (அந்தோனி கிருஸ்ரி – பெரியஉப்போடை, மட்டக்களப்பு)
11.08.2006 அன்று யாழ். மாவட்டம் முகமாலை, கிளாலி, பளைப் பகுதிகளினூடாக சிறிலங்கா இராணுவத்தினர் முன்னெடுத்த வலிந்த தாக்குதலிற்கெதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கலைவிழி, லெப். கேணல் ஆர்த்தி, கப்டன் இசைநிலா, கப்டன் எழில்நதி உட்பட ஏனைய மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.



லெப். கேணல் கலைவிழி (நல்லதம்பி நித்தியா – ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்)
லெப். கேணல் ஆர்த்தி (பொன்னுத்துரை சரஸ்வதி – கொக்குவில், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஆனந்தசுரபி (சந்தானகிருஸ்ணன் சந்திரவாணி – திருகோணமலை)
வீரவேங்கை இசைத்தென்றல் (நாகேஸ்வரன் கலைமதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அருங்கதிர் / மதனி (சிவப்பிரகாசம் யோகேஸ்வரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கவிமதி / கிண்ணியா (றெங்கநாதன் தேவிகா – முரசுமேட்டை, கிளிநொச்சி)
வீரவேங்கை நீலச்சுடர் (அன்ரன்பெனடிற் பிறேமலதா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வாணி (மார்க்கண்டு சாந்தமலர் – விடத்தல்தீவு, மன்னார்)
வீரவேங்கை அணியிசை – பொழில் (பாலசிங்கம் கௌசலா / கௌசி – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
11.08.2007 அன்று மணலாறு கோட்டத்தில் சிலோன் தியேட்டர்ப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் சுடரருவி, வீரவேங்கை இறைவாணி, வீரவேங்கை பிறையமுதன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடிவிற்காக 11.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் தமிழ்க்கீதன், லெப்டினன்ட் கலையழகன், லெப்டினன்ட் தமிழறிவு, வீரவேங்கை இளவரசி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
நீளும் நினைவுகளாகி…


தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”



