கப்டன் றெஜி வீரவணக்க நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் றெஜி அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
02.12.1985 அன்று மணலாறு கோட்டம் பட்டிக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் விழிப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் றெஜி அவர்களின் 35ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரம்.

நீளும் நினைவுகளாகி…
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


