தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

மட்டு – அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் லக்ஸ்மன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…
28.12.1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் லக்ஸ்மன் உட்பட ஏனைய மாவீரர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப். கேணல் லக்ஸ்மன் (வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
மேஜர் துவாரகன் – பிரதீப் (சிவஞானம் முத்துலிங்கம் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
மேஜர் நிதர்சராஜா (நிவேசன் (மயில்வாகனம் – ஏரம்பமூர்த்தி மட்டக்களப்பு)
மேஜர் சத்தியா (அருச்சுனப்பிள்ளை மோகன்பிள்ளை – பதுளை)
கப்டன் இதயராஜன் (இராமகுட்டி பேரின்பராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
கப்டன் வித்துவான் (இரத்தினசிங்கம் மோகனரெத்தினம் – கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் காண்டீபன் ( நடராசா யோகராசா – கிரான், மட்டக்களப்பு)
லெப்டினன்ட் புரட்சிமாறன் / ராஜித் (அரசமணி சிவகுமார் – ஏறாவூர், மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ஆழிக்குமரன் (முருகன் மேகநாதன் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அருணகிரிநாதன் / ஜெயசீலன் (வில்லியம் பந்துலசேன – தம்பிலுவில், அம்பாறை)
2ம் லெப்டினன்ட் தயாளன் (கோபாலபிள்ளை ஜெகநாதன் – அம்பிலாந்துறை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தவராஜ்( பாக்கிராஜா ஜெகநாதன் – தாண்டியடி, அம்பாறை)
2ம் லெப்டினன்ட் ரமேஸ் (கந்தையா ஜெயந்திரன் – செங்கலடி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சாஸ்திரி (சித்திரவேல் சுதாகரன் – கொக்கட்டிக்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை கலாதீபன் (சாமித்தம்பி தியாகராஜன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சிறீரூபன் (வைரமுத்து விஜயரட்ணம் – வத்தாறுமூலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை முருகானந்தன் – தமிழரசன் (இளையதம்பி கமலபரன் – ஆரையம்பதி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சேகரன்( செல்லையா விஜயராசா – கோமாரி, அம்பாறை)
28.12.1992 அன்று யாழ். மாவட்டம் தெல்லிப்பளை பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் நீலவண்ணன், 2ம் லெப்டினன்ட் நாவண்ணன் ஆகிய வேங்கைகளின் 31ம் ஆண்டுக்கு வீரவணக்க நாள் இன்றாகும்.
நீளும் நினைவுகளாகி…
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
