லெப்டினன்ட் கேணல் பவமாறன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

லெப்டினன்ட் கேணல் பவமாறன், லெப்டினன்ட் கேணல் மிதுலன், லெப்டினன்ட் கேணல் அயோனி, கப்டன் அக்காச்சி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.
15.09.1989 அன்று யாழ். மாவட்டம் நீர்வேலி பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பலுடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘நீர்வேலிப் பகுதி பொறுப்பாளர்’ கப்டன் அக்காச்சி / ஜெகன், வீரவேங்கை மதன் ஆகிய வேங்கைகளின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
15.09.2000 அன்று வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் அல்லி / சசி அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
15.09.2007 அன்று அம்பாறை மாவட்ட காட்டுப் பகுதியில் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் பவமாறன், லெப்டினன்ட் கேணல் மிதுலன், லெப்டினன்ட் கேணல் அயோனி, மேஜர் எரிமலை ஆகிய மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
அம்பாறை மாவட்டம் காட்டுப் பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிப் போராளிகளான இவர்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர்.
இவர்களில் லெப்டினன்ட் கேணல் பவமாறன் அவர்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருக்கு எதிராக பல தாக்குதல்களை நடாத்தி பல படையினரின் இழப்பிற்கும் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டம் காட்டுப் பகுதிக்குள் உள்நுழைந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருக்கு எதிராக தொடர்ந்து மூன்று நாட்கள் சிறு சிறு தாக்குதல்களை நடாத்திய இவர்கள் தாக்குதல் நடவடிக்கையின்போது தவறுதலாக கிளைமோர் வெடித்ததினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
15.09.2007 அன்று மன்னார் மாவட்டம் பாலம்பிட்டிப் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மேஜர் தெய்வமணி அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடிவிற்காக 15.09.2008 அன்று வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் கருமுகிலன் / கங்கையமரன், கப்டன் பவளராஜ், கப்டன் செம்முகிலன், கப்டன் புதியபுலி, லெப்டினன்ட் எழில்வாணன், லெப்டினன்ட் நகையரசி / சமர்முகில், லெப்டினன்ட் செந்தமிழ் / கயல்வெற்றி, லெப்டினன்ட் கலையரசி, லெப்டினன்ட் திருநிலா, 2ம் லெப்டினன்ட் செம்பருதி / கணேசினி ஆகிய வேங்கைகளின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
நீளும் நினைவுகளாகி…
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
