லெப்டினன்ட் கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

லெப்டினன்ட் கேணல் தூயமணி, லெப்டினன்ட் இளமாறன், 2ம் லெப்டினன்ட் வேங்கை, வீரவேங்கை களமலையன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
22.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி “ஜெயசிக்குறு” நடவடிக்கைப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் தூயமணி உட்பட ஏனைய (13) மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
20.08.1997 அன்று உலங்கு வானூர்திகள் மற்றும் ஆட்டிலறி பீரங்கிகளின் சூட்டாதரவுடன் டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகளின் துணையுடன் புளியங்குளத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படையினரால் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பல மணிநேரம் தீரமுடன் களமாடி படை நடவடிக்கையை முற்றாக முறியடித்தனர்.
தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.
லெப்டினன்ட் கேணல் தூயமணி (வைத்தியநாதன் சிவநாதன் – கிளிநொச்சி)
கப்டன் கற்கோடன் (சின்னத்தம்பி சத்தியானந்தன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை கலைச்சுடர் / நந்தகுமாரி (முருகையா சிவரூபி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிலவன் (பரமேஸ்வரன் ஆனந்தகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நடனக்குமார் (சிவஞானம் ஜெயராம் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் நக்கீரன் (கிருஸ்ணபிள்ளை சிறீஸ்வரன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் நித்தியா (கந்தையா ராகினி – வவுனியா)
லெப்டினன்ட் மான்விழி (தங்கவேல் ராஜி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் திராவிடன் (பத்மநாதன் விஸ்ணுகாந்தன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் இளமாறன் (உமேந்திரக்குருக்கள் கார்த்திகைத்தீபன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் வேலவன் (ஆசீர்வாதம் சசிதரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அன்பு (திலகேந்திரன் ஸ்ராலின் விஜயபாஸ்கர் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை யாழ்மொழி (முருகையா சிவகௌரி – கிளிநொச்சி)
22.08.2000 அன்று யாழ். மாவட்டம் சரசாலைப் பகுதியில் வேவு நடவடிக்கையின்போது சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் வண்ணன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
22.08.2007 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை சோழமருதன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
22.08.2007 அன்று கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை களமலையன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடிவிற்காக 22.08.2008 அன்று வெவ்வேறு சம்பவங்களின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் இலக்கியன், லெப்டினன்ட் மெய்யறிவு, 2ம் லெப்டினன்ட் வேங்கை, 2ம் லெப்டினன்ட் அன்பு, 2ம் லெப்டினன்ட் மதுநிலவன், 2ம் லெப்டினன்ட் அன்பரசன், வீரவேங்கை ஒளிச்சுடர், வீரவேங்கை இளங்கோ ஆகிய வேங்கைகளின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
