எம்.ரி.செயோய் கப்பலில் உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள்

விடுதலைப் புலிகளின் எம்.ரி. செயோய் (M.T. Seyoe) எண்ணைக் கப்பலில் காவியமான போராளிகள் வீரவணக்க நாள் நாள் இன்றாகும்.
சர்வதேசக் கடற்பரப்பில் இந்தோனேசிய கடற்பரப்புக்கு அருகில் வைத்து (சிறிலங்காவில் இருந்து 825 NM – 1650 KM தொலைவில்) விடுதலைப் புலிகளின் எம்.ரி. செயோய் (M.T. Seyoe) எண்ணைக் கப்பலை இந்தோனேசிய கடற்படையினரும், சிறிலங்கா கடற்படையினரும் இணைந்து 17.03.2007 அன்று இரவு 8:15 மணியளவில் வழிமறிக்க முயற்சித்த வேளையில் சர்வதேச கடற்பரப்பின் விதிமுறைகளுக்கு அமைவாக கப்பல் நகர்த்தவண்ணம் இருந்தமையால் கடற்படையினரின் அத்துமீறல் எல்லை மீறியபோது 18.07.2007 அதிகாலை 7:30 மணியளவில் விடுதலைப்புலிகளின் மரபிற்கு ஏற்றவகையில் சரணாகதி அடையாமல் கப்பலுடன் தம்மைத் தாமே கப்பலுடன் சமையல் வாயு கலன் கொண்டு தீயிட்டு கப்பலை வெடிக்கவைத்து வீரச்சாவைத் தழுவிய கப்பல் கப்டன் கடற்புலி லெப்.கேணல் இசைக்கோன், கடற்புலி லெப். கேணல் கனியமுதன், கடற்புலி பாவரசன், கடற்புலி களிமறவன், கடற்புலி பிரியன், கடற்புலி பாண்டியன், கடற்புலி இளமாறன் / பச்சைக்கிளி, கடற்புலி எல்லமுதன் உட்பட 09 கடல்வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலைப்புலிகளின் கப்பல் தொகுதியில் இணைந்து இரண்டு வாரம் என்பதினாலும், மற்றைய கப்பல்களுக்கான எண்ணெய் மற்றும் சில உலருணவுகளை விநியோகிப்பதற்ககும் அவற்றை பிறிதொரு நாட்டில் தருவிப்பதற்குமான தயார்படுத்தலில் கப்பலும் போராளிகளும் இருந்தமையால் எந்த ஆயுத தளபாடங்க ளும், உயிரை போக்குவதற்கு எந்த ஒரு சிறு ஆயுதமும் அந்த கப்பலிலும் போராளிகளிடமும் இருக்கவில்லை. சிறு தூரங்களுக்கு, நேரங்களும் செல்லுமாயின் மறு கப்பல்களும் போராளிகளும் பாதிக்கப்படுவார்கள் எனும் நோக்குடன் அதிகாலை தாயகத்தின் தலைமை பணியகத்திற்கும் மறு கப்பலான எம்.வி.கோசியாவிற்கும் அறிவித்துவிட்டு எல்லோரும் ஒன்றாக கூடிநின்று சமையலுக்கு பயன்படுத்தப்படும் LPG எரிவாயு கலனை வெடிக்கவைத்து கடலோடு காவியமானார்கள்.
எம்.ரி. செயோய் கப்பலில் உலகெங்கும் கடலோடி – ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள்…..








தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
