மண்டைதீவில் கைது செய்து காணாமற்போனவர்கள்

மண்டைதீவில் கைது செய்து காணாமற்போனவர்கள் 23.08.1990 – 25.09.1990
யாழ் நகரத்திற்குத் தெற்காக வேலணைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் ஆயிரத்து இருநூறிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற மண்டைதீவுப் பிரதேசம் அமைந்துள்ளது.
1990.08.23 அன்று இராணுவத்தினர் ஊர்காவற்துறையிலிருந்து மண்டைதீவு நோக்கி இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நடவடிக்கையின் போது மக்களைப் பாதுகாப்புக் கருதி ஆலயங்களிற் தங்குமாறு முதல் நாள் உலங்குவானூர்தியிலிருந்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு அறிவித்தனர். இதன்படி மண்கும்பான், அல்லைப்பிட்டி போன்ற கிராமத்து மக்கள் மண்கும்பான் அந்தோனியார் தேவாலயத்திலும், அல்லைப்பிட்டி பிலிப்நேரியார் ஆலயத்திலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர்.
1990.08.24 அன்று மண்கும்பான் அந்தோனியார் ஆலயத்திலும், இருபத்தைந்தாம் திகதி அதிகாலை அல்லைப்பிட்டி பிலிப்நேரியார் கோயிலிலும் தஞ்சமடைந்த மக்களில் பதினைந்து வயதிற்கும் நாற்பது வயதிற்கும் இடைப்பட்டவர்களை இராணுவத்தினர் கைதுசெய்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், இருவர் என மண்டைதீவில் இருபத்தெட்டுப் பேரும், அல்லைப்பிட்டியில் முப்பத்திரண்டு பேரும், மண்கும்பானில் பத்துப் பேருமாக மொத்தம் எழுபது பேர் கைது செய்யப்பட்டனர்.
28.08.1990 இல் கைது செய்தவர்களில் ஒரு சிலர் விடுவிக்கப்பட்டனர். பின்பு 23.09.1990 இராணுவத்தினரும், துணைக்குழுக்களும் சேர்ந்து மண்கும்பான் அ.த.க பாடசாலையிலிருந்து பதினெட்டு மாணவர்களைக் கைது செய்தனர். எல்லாமாக மூன்று கிராமத்திலும் எண்பத்தெட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் எவரும் இன்று வரை விடுதலையாகவில்லை.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விஜயரட்ணம், சுகிர்தரட்ணம், பிரேமரட்ணம் ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தையான யேசுரட்ணத்திடம் இது தொடர்பாகக் கேட்ட போது:

கைது செய்யப்பட்ட என் பிள்ளைகளின் நிலை தொடர்பாக 1991 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் நாங்கள் சிறிதர் வீதியில் இருக்கும் ஈ.பி.டி.பி செயலகத்திற்குச் சென்று திரு.டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டோம். ”அப்போது அவர் அநேகமாக மூன்று பிள்ளைகள் என்றால் ஒன்றும் நடந்திருக்காது நான் அனுராதபுரம் போய்வந்து சொல்கிறேன்.” என்றார். அப்போது நாங்கள் பிள்ளைகளின் ஆவணங்களைக் கொடுத்தபோது அதைப் பிரதி பண்ணித் தரும்படி கேட்டார். அதன்படியே நாங்கள் அடுத்த நாள் அவரிடம் கையளித்தோம்.
அதன் பின்பு கூட்டுப்படைத் தளபதியாக இருந்த திரு. டென்சில் கொப்பேகடுவ அவர்களிடம் மனு செய்தோம். நேரிலும் அவரிடம் பல தடவைகள் கேட்டோம். ஓவ்வொரு தடவையும், ஒவ்வொரு முறையும் டக்ளஸ் தேவானந்தாவோடு தொடர்பு கொண்டீர்களா என்றுதான் கேட்பார். கடைசி முறையாக 13.05.1992 நானும், அப்போதைய கல்விப் பகுதி பிரதி அமைச்சர் திருமதி. ராஜமனோகரி புலேந்திரன் அவர்களும் திரு. டென்சில் கொப்பேகடுவ அவர்களைக் கேட்ட போது, அவர் நான் இம்முறை தீவுப்பகுதிக்குப் போய்வந்து உங்கள் பிள்ளைகளைக் காட்டுகிறேன் என்றார். அதன் பின்னர் 1992 ஆனி மாதம் இறுதி வாரத்தில் கொழும்பு பார்க் வீதியில் இருக்கும் ஈ.பி.டி.பி செயலகத்தில் திரு. டக்ளஸ் தேவானந்தாவைக் கேட்டோம். அவரும் தான் இம்முறை தீவுப்பகுதிக்குப் போய் வந்து சொல்லுவதாகக் கூறினார்.
14.08.1992 திருமலை சீ.சீ.எம்.பி சிறையில் எமது பிள்ளைகள் உட்பட எண்பது பேர் மதிய உணவின் பின்னர் பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லப்பட்டனர் என தகவல் கிடைத்தது. அதன் பின்னர் 23.12.1994 இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிடம் மனு பண்ணினோம். அப்போது அவர் ஆணைக்குழு விசாரணை செய்யப்போவதாகவும், அதற்கு எங்களை விண்ணப்பம் பண்ணும்படியும் சொன்னார். அதன்படியே ஆணைக்குழு விசாரணைக்கு விண்ணப்பித்தோம்.
12.06.1996 இல் ஆணைக்குழு விசாரணைக்கு வரும்படி அழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது ஆணைக்குழுவினர் உங்கள் பிள்ளைகளை திரு. டக்ளஸ் தேவானந்தாவிடம் கேளுங்கள் என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் கேட்கமுடியாது நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறினோம். அதன்படி தாங்கள் கேட்டுச் சொல்லுவதாகக் கூறினார்கள். ஆனால் இதுவரை எவ்வித பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை.” எனத் தெரிவித்தார்.
இராணுவத்தினராலும், துணைக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்களில் பலர் சித்திராவதைகளின் பின் உயிரிழந்ததாகவும் அவர்களது உடல்களை மண்டைதீவில் வீட்டு வளவினுள் உள்ள கிணற்றில் போட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். இவர்களிற் சிலரின் எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டன. இவ்வாறு காணாமற்போய் உயிரிழந்தவர்களின் நினைவாக மண்டைதீவில் நினைவுக்கல் கட்டப்பட்டுள்ளது.
23.08.1990 – 25.09.1990 வரை மண்டைதீவில் கைது செய்து காணமற்போனவர்கள் விபரம்:
01. சூசைப்பிள்ளை செல்வநாயகம் (வயது 35 – கடற்றொழில்)
02. இ.சுதாகரன் (வயது 20)
03. இ.விபுலானந்தர் (வயது 30)
04. இரட்ணம் ஜெயசீலன் (வயது 23)
05. உதயகுமார்
06. ந.குகானந்தராசா (வயது 24)
07. பாலசிங்கம் (வயது 30)
08. பத்திநாதர் டயஸ் (வயது 22)
09. பத்திநாதர் சென்யூட் (வயது 27)
10. பழனித்துறை சாத்தியபாலன் (வயது 34 – கமம்)
11. பி.தவம் (வயது 18)
12. பி.ஜெயச்சந்திரன் (வயது 18)
13. பி.சதீஸ்வரன்
14. பி.பத்மராசா (வயது 20)
15. ரி.இருதயராசா (வயது 26)
16. ரி.ஆரோக்கியநாதன் (வயது 23)
17. ரி.அருள்நேசன் (வயது 22)
18. ரி.யோகராசா (வயது 18)
19. ரி.செல்வரட்ணம் (வயது 25)
20. ரி.ஞானேந்திரன் (வயது 20)
21. ரி.சுந்தரலிங்கம் (வயது 24)
22. ரி.சாந்தலிங்கம் (வயது 20)
23. ரி.சிமோன் (வயது 20)
24. ரி.ராஜ்குமார் (வயது 32)
25. ரி.ராதாகிருஸ்ணன்
26. ரி.ரவீந்திரன் (வயது 21)
27. வை.எட்வேட் (வயது 21)
28. த.பாலரட்ணம் (வயது 20)
29. திருநாயகம் சட்டநாதபிள்ளை (வயது 32 – கமம்)
30. மா.தவசீலன் (வயது 24)
31. மடுதீன் அன்ரனிற் (வயது 21)
32. மிசேல் ஸ்ரானிக் (வயது 19)
33. மிசேல் சில்வஸ்ரார் (வயது 32)
34. அ.அழகராசா (வயது 19)
35. அ.ஜெயசீலன் (வயது 23)
36. அன்ரன் அசில்லாஸ் (வயது 28 – மேசன்)
37. அன்ரன் அருள்தாஸ் (வயது 26)
38. அந்தோனி ஆரோக்கியராசா (வயது 23)
39. அந்தோனி றொபேட் (வயது 20)
40. ஆர்.முருகானந்தன் (வயது 21)
41. ஆர்.ரவீந்திரன் (வயது 20)
42. அலம்பின் றொபேட் (வயது 18)
43. ஜெயக்குமார் (வயது 22)
44. ஜோர்ச் சில்வஸ்ரார் (வயது 20)
45. ஜேசுதாஸ்
46. யோ.விஜயபாலன் (வயது 21)
47. நோபேட் ரமேஸ் (வயது 19)
48. கே.இந்திரகுமார் (வயது 21)
49. கே.இராசசேகரன் (வயது 21)
50. கே.பிரமாதீஸ்வரன் (வயது 22)
51. கே.பீற்றபோல் (வயது 17)
52. கே.விஜயகுமார் (வயது 19)
53. பொ.காந்தலிங்கம் (வயது 24)
54. செ.சுவக்கிப்பிள்ளை (வயது 30)
55. சொர்ணலிங்கம் லிங்கேஸ்வரன் (வயது 21 – கமம்)
56. ச.சதானந்தராசா (வயது 28)
57. சாள்ஸ் அன்ரனி அன்னதாஸ் (வயது 27)
58. சி.அரவிந்தன் (வயது 20)
59. சி.சத்தியசீலன் (வயது 29)
60. சி.விமலதாஸ் (வயது 20)
61. சிவபாலசிங்கம் (வயது 28)
62. வி.டொன்போஸ்கோ (வயது 19)
63. விஜயரட்ணம் ரவி (வயது 23)
64. வில்பிரேட் தேவராசா (வயது 25)
65. எஸ்.பிறேமரட்ணம் (வயது 16 – மாணவன்)
66. எஸ்.திருச்செல்வம்
67. எஸ்.மகேந்திரன் (வயது 20)
68. எஸ்.அன்பழகன் (வயது 19)
69. எஸ்.அருள்நேசன் (வயது 28)
70. எஸ்.செல்வநாதன் (வயது 21)
71. எஸ்.சுகிர்தரட்ணம் (வயது 19)
72. எஸ்.சிவரூபன் (வயது 16)
73. எஸ்.சிவகுமார் (வயது 19)
74. எஸ்.சிவபாலன் (வயது 19)
75. எஸ்.ரஞ்சித்குமார் (வயது 15)
76. எஸ்.ரவீந்திரன் (வயது 22)
77. எஸ்.லிங்கேஸ்வரன் (வயது 21)
78. என்.இரட்ணசிங்கம் (வயது 45)
79. என்.ஜேசுதாஸ் (வயது 28)
80. எம்.சிந்தாத்துரை (வயது 35)
81. என்.விஜயரட்ணம்
வேறு தினங்களில் காணாமற்போனவர்களின் விபரம்:
01. நிசோலஸ் டயஸ் எட்வின் (வயது 17 – 17.07.1996 அன்று காணாமல் போனவர்)
02. பி.வரோதயநாதன் (வயது 18 – 25.05.1993 அன்று காணாமல் போனவர்)
03. தாவீது பென்ஜமீன் (வயது 25 – 1992.08 அன்று காணாமல் போனவர்)
04. என்.சச்சிதானந்தராசா (வயது 24 – 1986 அன்று காணாமல் போனவர்)
05. வி.பாலரஞ்சன் (வயது 39 – 1991.02 அன்று காணாமல் போனவர்.)
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
நன்றி – ‘ஓவியம்’ ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள்.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.
