மேஜர் சத்தியமூர்த்தி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

மேஜர் சத்தியமூர்த்தி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.
11.03.2007 அன்று மன்னார் மாவட்டம் தம்பனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது விழுப்புண்ணடைந்து பாண்டுவும் பெறும்வேளையில் 19.03.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் சத்தியமூர்த்தி அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

19.03.2007 அன்று யாழ். மாவட்டம் கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை கதிர் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாய்மண்ணின் விடிவிற்காக 19.03.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் யாழ்சோழன், 2ம் லெப்டினன்ட் மதுவொளி, 2ம் லெப்டினன்ட் மேனகை, 2ம் லெப்டினன்ட் கலைவீரன், வீரவேங்கை அரசேந்தி, வீரவேங்கை மணிச்சுடர் ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.






இன்றைய நீளும் நினைவுகளில்…
விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

