மேஜர் திருவருள் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

மேஜர் திருவருள், கப்டன் ஜான், லெப்டினன்ட் எழிலரசி, 2ம் லெப்டினன்ட் தனிவாகை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.
19.08.1997 அன்று யாழ். மாவட்டம் மானிப்பாய் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்கா படையினருடனான மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் தனது கைக்குண்டை வெடிக்கவைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலனாய்வுத்துறை கப்டன் ஜான் / தமிழரசன் அவர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ்ப்பாணத்தை சிங்கள பேரினவாத அரசு கைப்பற்ற முற்பட்டவேளை அதற்கு எதிரான முறியடிப்பு சமரில் பங்கேற்ற கப்டன் ஜான் ‘புலிப்பாய்ச்சல்’ நடவடிக்கையில் முக்கிய பங்காற்றினார்.
யாழ். குடாநாட்டை சிறிலங்கா படையினர் கைபற்றிய பின்னும் யாழ். நகரில் புலானாய்வுத்துறை போராளிகயாக நின்று பணிபுரிந்தார்; அந்த வேளையில் ஜானும் ஏனைய போராளிகளும் இருக்கும் மறைவிடத்தை அறிந்த படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஏற்பட்ட மோதலில் தனது கைக்குண்டை வெடிக்கவைத்து அதிகாலை ஐந்து மணியளவில் மானிப்பாயில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
19.08.2000 அன்று யாழ். மாவட்டம் பாசையூர் கடற்பரப்பில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் திருவருள் / எமர்சன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
19.08.2000 அன்று மட்டு – அமபாறை மாவட்டத்தில் சூரியவௌ பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் விகடன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
19.08.2000 அன்று யாழ். மாவட்டம் கச்சாய் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் நீலன் / தமிழழகன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
19.08.2000 அன்று திருகோணமலை மாவட்டம் வில்கம் விகாரை பகுதியில் வேவு நடவடிக்கையின்போது சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் திருமாறன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
19.08.2000 அன்று திருகோணமலை மாவட்டம் அலிஒலுவை பகுதியில் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் உதயன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடிவிற்காக 19.08.2008 அன்று வெவ்வேறு சம்பவங்களின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் இசையமுதன், லெப்டினன்ட் மலர்நிலவன், லெப்டினன்ட் எழிலரசி, 2ம் லெப்டினன்ட் தனிவாகை / இலக்கியா, 2ம் லெப்டினன்ட் இளம்புலி, வீரவேங்கை நகைவிழி / ஈழவேந்தினி ஆகிய வேங்கைகளின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
