மேஜர் வான்மதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

மேஜர் வான்மதி, கப்டன் பூவரசி / சுபாசினி, வீரவேங்கை பொய்கை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.
28.08.1991 அன்று வவுனியா மாவட்டம் பாவற்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் சுசி மாமா, லெப்டினன்ட் குமார் ஆகிய வேங்கைகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
28.08.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை கபிலா, வீரவேங்கை பொய்கை ஆகிய வேங்கைகளின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
28.08.2007 அன்று மன்னார் மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் செந்தூரகன் / கரன், வீரவேங்கை மின்னிலவன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
28.08.2007 அன்று வவுனியா மாவட்டம் பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் ஈழதீபன் அவர்களின் வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடிவிற்காக 28.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வான்மதி, கப்டன் பூவரசி / சுபாசினி, கப்டன் குறிஞ்சிவீரன் ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
நீளும் நினைவுகளாகி…
இன்றய நினைவுகளுடன்…
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்ற வேளை அம்மூவரின் உயிர் காக்க 28.08.2011 அன்று தமிழகத்தில் காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி மரண தண்டனைக்கு எதிராக ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட வீரமங்கை செங்கொடி அவர்களின் நினைவு வணக்கநாள்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
